விடிய விடிய மக்கள் எதிர்ப்பு: மருத்துவரின் உடலை தகனம் செய்ய அதிகாரிகள் திணறல்

விடிய விடிய மக்கள் எதிர்ப்பு: மருத்துவரின் உடலை தகனம் செய்ய அதிகாரிகள் திணறல்
விடிய விடிய மக்கள் எதிர்ப்பு: மருத்துவரின் உடலை தகனம் செய்ய அதிகாரிகள் திணறல்
Published on

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த 56 வயதான மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 4-ஆம் தேதி ஆந்திராவில் இருந்து சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில் ஆந்திர மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அம்பத்தூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் அங்கு கொண்டு சென்றனர். ஆனால் தகவல் அறிந்த மின்மயான ஊழியர்கள் உடலை எரிக்க முடியாது என கூறிவிட்டனர்.

மேலும் கொரோனாவால் உயிர் இழந்தவரின் உடலை அம்பத்தூர் கொண்டு வந்து இருப்பது தெரிய வந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அம்பத்தூர் 7 வது மண்டலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டதோடு உடலை அங்கு எரிக்க மாட்டோம் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்து உடலை கொண்டு சென்றதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே திருவேற்காடு அடுத்த கோலடி பகுதியில் உள்ள மின் மயானத்தில் மருத்துவரின் உடல் தகனம் செய்யப்படுவதாக தகவல் பரவியதால் அங்கேயும் 300 க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். அப்போது மக்கள் மயானத்தை பூட்டியாதல் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உடலை எரிக்க மாட்டோம் என உறுதி அளித்ததால் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆனாலும் நள்ளிரவில் உடலை எரித்துவிடுவார்கள் என்பதால் விடிய விடிய மக்கள் சார்பில் 4 பேர் மின்மயானத்திலேயே காவலுக்கு இருந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை எரிக்க முடியாமல் அதிகாரிகள் திணரி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com