கம்மவான்பேட்டை: கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

கம்மவான்பேட்டை: கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
கம்மவான்பேட்டை: கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
Published on

தமிழகத்திலேயே அதிக ராணுவ வீரர்களைக் கொண்ட கம்மவான்பேட்டை கிராமத்தில், கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே அமைந்துள்ளது தமிழகத்திலேயே அதிக ராணுவ வீரர்களைக் கொண்ட கம்மவான்பேட்டை கிராமம். கார்கில் போரின் 22 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, அதில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும், அப்போரில் உயிரிழந்த இதே கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கும் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முன்னாள் ராணுவ வீரர்களால் நடைபெற்றது.

இதில், முப்படைகளில் சேர பயிற்சி பெறும் வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு, கிராம மக்களுடன் தங்களின் அஞ்சலியை செலுத்தினார்கள். இக்கிராமத்தில் வீட்டிற்கு ஒருவருரோ அல்லது இருவரோ இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அதனால் இது ராணுவப்பேட்டை என்றழைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com