தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்திற்கு உட்பட்ட கரியம்பட்டி, செங்கனூர், உள்ளிட்ட 7 கிராமத்துக்கு தாய் கிராமமான நாயக்கனூர் கிராமத்தில், கோயில் கூலி (காளை) கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. இந்த காளை, வருடந்தோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்தது. அக்கிராம பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் காளையான இதனை, கடவுளை வணங்குவது போல மக்கள் வணங்கி பாதுகாத்து வந்தனர்.