தமிழ்நாடு
தீபாவளி, அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த யாத்ரீகர்கள்
தீபாவளி, அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த யாத்ரீகர்கள்
தீபாவளி, அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட யாத்ரீகர்கள் குவிந்துள்ளனர்.
தீபாவளி விடுமுறை மற்றும் அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் யாத்ரீகர்களும் சுற்றுலாப் பயணிகளும் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், வடமாநிலத்தவர்களும் ராமேஸ்வரத்தில் குவிந்திருக்கின்றனர். அதிகாலையிலிருந்து அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, தங்க இடமின்றி அவதியடைவதாக பயணிகள் கூறுகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், தனுஷ்கோடி கடலில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.