சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 4 கவுன்டர்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இன்று தொடங்கியது. நீண்ட நேரம் காத்திருந்தும் மருந்து கிடைக்கவில்லை எனக் கூறி சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 2 கவுன்ட்டர்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நேரு விளையாட்டு அரங்கில் 4 கவுன்ட்டர்களில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மருந்து விநியோகம் இன்று தொடங்கியது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்ததை வாங்க சென்னை மட்டுமன்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர்.
ஒருவருக்கொருவர் முந்திச் செல்ல முயன்றதால் சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் மருந்து கிடைக்கவில்லை எனக்கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க வேண்டும் எனவும், டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.