தகாத வார்த்தையில் திட்டிய ஊழியர் : நிதிநிறுவனத்திற்குள் நுழைந்து மக்கள் போராட்டம்

தகாத வார்த்தையில் திட்டிய ஊழியர் : நிதிநிறுவனத்திற்குள் நுழைந்து மக்கள் போராட்டம்
தகாத வார்த்தையில் திட்டிய ஊழியர் : நிதிநிறுவனத்திற்குள் நுழைந்து மக்கள் போராட்டம்
Published on

புதுச்சேரியில் தவணை தொகை கட்ட தவறிய பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய தனியார் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சரஸ்வதி. இவர் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் 60,000 ரூபாய் தனி நபர் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதத்தோறும் தவணை செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த இரு மாதங்களாக தவணை தொகை செலுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து நிதி நிறுவனத்தில் இருந்து அப்பெண்ணை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் ஒருவர் கடன் தொகை செலுத்தாதது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் ஊழியர் கடன் பெற்ற சரஸ்வதியை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. 

இதுகுறித்து சரஸ்வதி தனது கணவருக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய நிதி நிறுவனத்தை கண்டித்தும் அந்த ஊழியர் மன்னிப்புகோர வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த தொலைபேசி, கணினி, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com