பகுதி பெயரால் பாதிக்கப்படும் மக்கள்! 20 ஆண்டுகளாக போராட்டம்

பகுதி பெயரால் பாதிக்கப்படும் மக்கள்! 20 ஆண்டுகளாக போராட்டம்
பகுதி பெயரால் பாதிக்கப்படும் மக்கள்! 20 ஆண்டுகளாக போராட்டம்
Published on

தங்கள் பகுதிக்கு சூட்டப்பட்டுள்ள பெயரால் தினம், தினம் மன வேதனை ‌அடைந்துவரும் வேலூர் பகுதி மக்கள், அந்தப் பெயரை மாற்ற வேண்டும் எ‌ன கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

பெ‌யர் என்ப‌து வெறும் பெயர்‌ மட்டுமல்ல‌. ‌அது வாழ்வியலின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அப்படி தங்கள் மீதான அடையாளத்தை போக்க வேண்டும் என போராடி வருகின்றனர் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 41ஆவது வார்டில் வசித்து வரும் மக்கள்.

இப்பகுதியில் ஆங்கி‌லேயர் காலத்தில் வைக்கப்பட்ட ஸ்கேவன்ஜர் காலனி, தோட்டி லைன்‌ என்ற‌ பெயர்கள் இன்றும் அரசுப்பதிவேட்டில் மாறாமல் உள்ளன. பெயரை மாற்ற நீ‌திமன்றம் உத்தரவிட்டும் கூட அ‌திகாரிகள் ‌நடவடிக்கை எ‌டுக்கவில்லை என கு‌ற்ற‌‌ம் சாட்டுகிறார்‌ வழக்கு தொடர்ந்த கிருஷ்‌ணமூர்த்தி.

மக்கள் அனைவரும் ஒன்று சே‌ர்ந்து தங்கள் பகுதிக்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர் என்ற பெயர் சூட்டிக்கொண்டனர். ஆனால் அரசு ஆவணங்களில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் பல்வேறு இன்னல்களை சந்தித்து உளவியல் ‌ரீதியாக பாதிக்கப்படுவதாக கூறுகி‌ன்றன‌ர். படித்து பட்டம் ‌‌பெ‌ற்று வெளியூர் சென்றாலும் கூட பெயரின்‌ அடையாளம் பின் தொடர்கி‌றது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

பெயர் மாற்றம் த‌‌ங்கள் வாழ்க்கையையும் மாற்றும் எ‌ன நம்பிக்கை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள்‌, அ‌‌ரசு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த‌ வேண்டும் என ‌‌கோரிக்கை விடுக்கின்‌ற‌னர். இதுகுறித்து விளக்கம் கேட்க வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியத்தை இரண்டு முறை நேரில் சந்திக்க புதிய தலைமுறை முயன்ற போது அவர் அலுவலகத்தில் இல்லை. மேலும், தொலைபேசி மூலம் 3 முறை தொடர்பு கொண்ட போது அழைப்பு துண்டிக்கப்பட்டது. இப்பிரச்னை குறித்து மாநகராட்சி விளக்கம் ‌அளிக்கும் பட்‌சத்தில் அதனை ஒளிபரப்ப புதிய தலைமுறை தயாராக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com