பிறந்தது புத்தாண்டு: உற்சாகமாக வரவேற்ற மக்கள்!

பிறந்தது புத்தாண்டு: உற்சாகமாக வரவேற்ற மக்கள்!
பிறந்தது புத்தாண்டு: உற்சாகமாக வரவேற்ற மக்கள்!
Published on

புதிதாக பிறந்த 2019 ஆம் ஆண்டை பொதுமக்கள் உலகெங்கும் சிறப்பாக வரவேற்றனர். இசை நிகழ்ச்சி, நடனம் என கொண்டாட்டம் கரைபுரண்டது.

சென்னையின் அடையாளமாக விளங்கும் மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். கடல் அலை போல துள்ளிக் குதித்து அதகளப்படுத்தினர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புத்தாடை அணிந்து ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண் டனர். பெசன்ட் நகர் கடற்கரையில் ஏராளமான மக்கள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருத்தணி முருகன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தின் லட்சக்கணக் கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.

புத்தகங்களுடன் புத்தாண்டை கொண்டாடுவோம் என்ற தலைப்பில், சென்னை தேனாம்பேட்டையில் புத்தக பிரியர்கள் புத்தகம் வாசித்து புத்தாண்டை கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமானவர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாகை வேளாங்கண்ணி அன்னை பேராலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மக்கள், விண்மீன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் ஒன்றாக கூடி நடனமாடியும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடியில் பனிமயமாத ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பழமைவாய்ந்த பனிமயமாத ஆலயத்தில் திரளான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பல்லாயிரக்கணக்கானோர் புத்தாண்டை வரவேற்றனர். குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் குடும்பத்துடனும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர்.

இதே போல அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா. நியூசிலாந்து உட்பட வெளிநாடுகளிலும் இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com