60அடி ஆழ கிணற்றில் விழுந்த மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டிபட்டினத்தில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாரை இயக்கச் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் உயிருடன் மயில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி மயிலை பத்திரமாக மீட்டனர், மேலும் மயிலின் உடம்பில் காயம் இருந்தால் மருத்துவம் பார்த்து பாதுகாப்பாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்..