பட்டுக்கோட்டை: கடன் பிரச்னையால் இரண்டு வயது மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

பட்டுக்கோட்டை: கடன் பிரச்னையால் இரண்டு வயது மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு
பட்டுக்கோட்டை: கடன் பிரச்னையால் இரண்டு வயது மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு
Published on

பட்டுக்கோட்டை அருகே கடன் பிரச்னை காரணமாக இரண்டு வயது மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை ஊராட்சி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ராஜ் என்பவரின் மனைவி மாலதி (22). ஜான்ராஜ் தேங்காய் உரிக்கும் கூலித் தொழிலாளி. மாலதி அப்பகுதியில் தனியார் சுயஉதவிக் குழுவிற்கு தலைவியாக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், பல்வேறு சுயஉதவிக் குழுவிற்கு மாலதி பணம் செலுத்த வேண்டிய நிலையில், தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் அக்கம்பக்கத்தினரிடம் கடன் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கேட்ட பணம் கிடைக்காததால் மனமுடைந்த மாலதி, தனது இரண்டு வயது மகன் ஹர்சனுக்கு குருனை மருந்தை கொடுத்து கொண்டு விட்டு தானும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com