பட்டுக்கோட்டை | நோயாளிகளிடம் பணம் வாங்கிய செவிலியர் கண்காணிப்பாளர்... வைரலாகும் வீடியோ!

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் கண்காணிப்பாளர், நோயாளிகளிடம் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டைமுகநூல்
Published on

செய்தியாளர் - I.M.ராஜா

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஷீலா. இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.

செவிலியர் ஷீலா
செவிலியர் ஷீலா

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக இவர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் கையூட்டு பெரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக தஞ்சையில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் ஷீலாவுக்கு சிறந்த செவிலியருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் வழங்கிய நிலையில், ஷீலா நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் வீடியோ வைரல் ஆகி வருவது பொதுமக்களிடம் பேசுப்பொருளாகி இருக்கிறது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என அனைவரும் மருத்துவமனைக்குள் வீல் சேர் தள்ளுவதற்கு, ஸ்ட்ரெச்சர் தள்ளுவதற்கு, ஆபரேஷன் தியேட்டர் அழைத்துச் செல்வதற்கு, காயம் பட்டவர்களுக்கு கட்டுப்போடுவதற்கு என ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனியாக பண வசூல் செய்வதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பலமுறை உள்ளூர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மருத்துவமனை அலுவலர்கள், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

பட்டுக்கோட்டை
”இதற்கு ராஜ்நாத் சிங்கே பொருத்தமானவர்” - கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு!

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அரசு சார்பில் உயர்தர சிகிச்சை கருவிகள் மற்றும் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டபொழுதும், அங்கு தரமான சிகிச்சை கிடைப்பதில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் ஷீலா, லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மீனா நியூட்டனிடம் கேட்ட பொழுது, “மாவட்ட மருத்துவத்துறை தலைமை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை மருத்துவர் சார்பாக உடனடியாக மெமோ வழங்கப்பட உள்ளது” எனக் கூறினார்.

பட்டுக்கோட்டை
”எனது நற்பெயருக்கு களங்கம்”- வீட்டு உரிமையாளரிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய யுவன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com