கிண்டி மருத்துவமனையில் மீண்டும் பரபரப்பு.. சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழப்பு.. நடந்தது என்ன?

கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் என்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது
கிண்டி
கிண்டி புதிய தலைமுறை
Published on

கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் என்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .இதனால், மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது இறப்புக்கான காரணம் குறித்து தற்போது மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

கடந்த 13 ஆம் தேதி கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜி என்ற மருத்துவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து , தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி அதே மருத்துவமனையிலே சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது மருத்துவர் நலமுடன் இருக்கிறார்.

கிண்டி
"அவங்களும் மனுசங்க தானே? - அரசு மருத்துவர்கள் நோயாளிகளை எப்படி நடத்துகிறார்கள்.. மக்கள் கருத்து!

தொடர்ந்து, மருத்துவர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள், செவிலியர்கள் இணைந்து நேற்று (14.11.2024) முழு நேரப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நிறுத்தப்பட்டது. அவசர பிரிவு மட்டுமே நடந்துவந்தது. இதன்பிறகு, தமிழ்நாடு அரசு நடத்திய பேசுவார்த்தையில் டாக்டர்கள் தங்களின் போராட்டத்தினை கைவிட்டனர்.

இந்தநிலையில், பெரும்பக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (33) நேற்று இதே கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவருக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி தற்பொழுது உயிரிழந்து உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

விக்னேஷ்
விக்னேஷ்

மருத்துவமனை முதற்கட்ட விசாரணையில் விக்னேஷுக்கு பித்தப்பை கல் பிரச்சினை இருந்தது தெரிய வந்தது.

கிண்டி
"அவங்களும் மனுசங்க தானே? - அரசு மருத்துவர்கள் நோயாளிகளை எப்படி நடத்துகிறார்கள்.. மக்கள் கருத்து!

மேலும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க முடியாமல் கிண்டி அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்தது குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில்தான், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது, கிண்டி மருத்துவமனையில் மேலும் பதற்றத்தினை அதிகரித்துள்ளது.இதனால், இளைஞர் விக்னேஷின் மனைவி, அண்ணன் மற்றும் பெற்றோர் என குடும்பமே கதறி அழுதனர்.

மேலும், விக்னேஷ் உயிரிழந்ததற்கு மருத்துவர்கள் அங்கே இல்லாததுதான் காரணம் எனக்கூறி விக்னேஷின் உறவினர்கள் தற்பொழுது மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மருத்துவமனை விளக்கம்

இந்தநிலையில்தான், பித்தப்பை கல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் இறப்பிற்கான காரணம் குறித்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

அதில், “ தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர முடியாத நிலையிலேயே நோய் தீவிரத்துடன் அவர் அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டார்.

விக்னேஷ் அழைத்துவரப்பட்ட அன்று அனைத்து உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் பணியில் இருந்தனர். குடல் நோய் வார்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com