பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று நடைபெறவிருக்கின்றது. இதனையொட்டி சுமார் பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறந்த ஆன்மிகவாதியும், நாடாளுமன்றவாதியுமான முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி குருபூஜை அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் நடைபெறவுள்ளது. அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாநில அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக அஞ்லி செலுத்த உள்ளனர்.
இதனையொட்டி தென்மண்டல காவல்துறை ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில், 7 டிஐஜிக்கள், 22 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 95 சிசிடிவி கேமராக்கள், 2 ஆள் இல்லா விமானங்கள், குற்றவாளிகளைக் கண்டறியும் ஃபேஸ் ட்ராக்கர் முறை என அதிநவீன தொழில்நுட்பங்களையும் காவல்துறையினர் பயன்படுத்துகின்றனர்.