தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவம் குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நடக்கும் சம்பவங்கள் என்றால் கணவரால் ஏற்படும் வன்கொடுமை, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, பெண்கள் துன்புறுத்துதல், வரதட்சணை கேட்டு கொடுமை செய்தல், ஆகியவையே அதிகமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றமாக பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 2021 ஆண்டு பெண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு கைதானவர்கள் மொத்தம் 12,653. இதில் ஆண்கள் 10,998 பெண்கள் 1,655. இதில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர்கள் 635 பேர். இதில் ஆண்கள் 594, பெண்கள் 41பேர். குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த விவரம் மொத்தம் 8064. இதில் ஆண்கள் 7165, பெண்கள் 899 என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான அதிகமாக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் விவரம்:
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
2019 ஆண்டு 370
2020 ஆண்டு 404
2021 ஆண்டு 442
வரதட்சணை கொடுமை
2019 ஆண்டு 28
2020 ஆண்டு 40
2121 ஆண்டு27
கனவனால் கொடுமை செய்யப்பட்ட பெண்கள்
2019 ஆண்டு 781
2020 ஆண்டு 689
2021 ஆண்டு 875
பெண் துன்புறுத்தல் செய்த சம்பவங்கள்
2019 ஆண்டு 803
2020 ஆண்டு 982
2021 ஆண்டு 1077