சென்னை சென்ட்ரல்| நள்ளிரவில் பயணிகள் குமுறல்.. ரயில் நிலையத்தில் நடப்பது என்ன? கலங்க வைக்கும் பேட்டி

கனமழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய பயணிகள் ரயில் ரத்தாகி ஆவடியில் இருந்து புறப்படுவதால் ஆவடியில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் காத்துக் கிடக்கின்றனர்.
ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள்
ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள்pt desk
Published on

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளங்களில் தண்ணீர் இருப்பதால் சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், மும்பை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்படுவதாக தகவல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ரயில்கள் 9 மணிக்கு மேல் புறப்பாடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். இதையடுத்து 12 மணிக்கு மேல் ரயில்கள் வருவதாக அறிவிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள்
ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள்pt desk

இந்நிலையில், போதிய வசதிகள் இல்லாத ஆவடி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 2000 பயணிகள் குவிந்ததால் நிற்கக்கூட இடம் இல்லாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் ஆவடியில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்த நிலையில், ஆவடி ரயில் நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் மூடியிருப்பதால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள்
சென்னை விடாமல் கொட்டும் மழை | ”2 மணி நேர இடைவெளி இருந்தால்தான்..?” - மேயர் பிரியா கொடுத்த பதில்!

பெண் பயணிகள் அவசரத்திற்கு கழிப்பறை பயன்படுத்த போதிய வசதி இல்லாததால் செய்வதறியாது திகைத்து நின்றனர். ரயில் நிலைய வளாகத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பும் இல்லாததால் பாதுகாப்பும் கேள்விக்குறியானது. கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பயணிகள், குழந்தைகளை படிக்கட்டுகளில் தூங்க வைத்துக் கொண்டு சிரமம் அடைந்தனர். ரயில் வருமா வராதா என நடைமேடையில் காத்திருந்த பயணிகள் மழையில் நனைந்தபடி நின்றிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com