அச்சுறுத்தும் காட்டுயானை கூட்டம்: அச்சத்தில் பயணித்த பயணிகள்

அச்சுறுத்தும் காட்டுயானை கூட்டம்: அச்சத்தில் பயணித்த பயணிகள்
அச்சுறுத்தும் காட்டுயானை கூட்டம்: அச்சத்தில் பயணித்த பயணிகள்
Published on

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாறு மின் நிலையம் செல்லும் வனசாலையில் காட்டு யானைக்கூட்டங்கள் உலவியதால் அரசு பேருந்தில் இருந்தப் பயணிகள் அச்சம் கொண்டனர். 

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாறு மின் நிலையத்திற்கு தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்து இயக்கப்படுகிறது. கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி வழியாக ஆறு கிலோமீட்டர் வனப்பாதையில் சென்று சுருளியாறு மின் நிலையம் அடைகிறது. அங்கு தமிழக மின்வாரிய பணியாளர் குடியிருப்புகள் மட்டுமே உள்ளன. 

இந்நிலையில், இந்த வனச்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென காட்டு யானைகள் கூட்டமாக வந்து சாலையில் உலவின. இதை கண்டு பேருந்தில் இருந்தப் பயணிகள் அச்சம் அடைந்தனர். அவர்கள் ஓட்டுநரிடம் பேருந்தை பின் பக்கமாக இயக்க கேட்டுக்கொண்டனர். ஆனால் பேருந்தை நோக்கி வருவதுபோல் வந்த யானை கூட்டம், சாலையைக் கடந்து வனத்திற்குள் சென்றதால் பயணிகள் நிம்மதியடைந்தனர். இதனால், இந்த வனச்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் பயணிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com