பேருந்து ஏணியில் அபாயப் பயணம் - திருச்செங்கோட்டில் அவலம்

பேருந்து ஏணியில் அபாயப் பயணம் - திருச்செங்கோட்டில் அவலம்
பேருந்து ஏணியில் அபாயப் பயணம் - திருச்செங்கோட்டில் அவலம்
Published on

திருச்செங்கோட்டிலிருந்து கரூர் செல்லும் அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக ஏணியில் தொங்கிக் கொண்டு நாள்தோறும் பயணிகள் செல்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சித்தாளந்தூர், கந்தம்பாளையம், பரமத்தி மணியனூர், வசந்தபுரம், இரும்பு பாலம், புளியம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. நாள்தோறும் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பணிகள் தொடர்பாக திருச்செங்கோடு வந்து செல்கின்றனர். இதனால் இந்த வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. 

குறிப்பாக, தினந்தோறும் இரவு 10 மணிக்கு மேல் திருச்செங்கோட்டில் இருந்து கரூர் சென்றடையும் கடைசி அரசுப் பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் செல்கின்றனர். கூட்ட நெரிசலின் காரணமாக தினமும் பேருந்தின் பின்புறத்தில் இருக்கும் ஏணியில் யாரெனும் ஒருவர் தொங்கிக்கொண்டு பயணிக்கின்றார். ஆபத்தை உணராமல் வீட்டுக்கு செல்ல வேண்டிய காரணத்தால், நெடுந்தூரம் ஏணியில் தொங்கியபடி பயணி செல்லும் காட்சி பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது. 

போதிய பேருந்து வசதிகள் இல்லாததே இந்த அவல நிலைக்கு காரணம் என அப்பகுதி பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com