திமுக இல்லாமல் காங்கிரஸால் தனித்து வெல்ல முடியுமா? அந்தக் கட்சியின் பலம் என்ன? ஓர் அலசல்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நடப்பது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வலிமை என்ன உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்..,
திமுக, காங்.
திமுக, காங்.புதிய தலைமுறை
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தொடங்கிய கருத்து யுத்தம், சமீபத்தில் நடந்து முடிந்த அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரைக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

``தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்’’ என செல்வப் பெருந்தகையும், ``நடப்பதே காமராஜர் ஆட்சிதான்’’ என இளங்கோவனும் மாறி மாறி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நடப்பது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வலிமை என்ன உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்..,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த மாதம் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி , நாமக்கல், ஈரோடு என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும், காமராஜர் ஆட்சி எனும் முழக்கத்தை முன்வைத்து, "நாம் மற்றவர்களுக்கு சீட்டுப் பிரித்துக் கொடுக்கும் அளவுக்கு முன்னேற வேண்டும்’’ என பேசிவந்தார்.

ஈரோடு கூட்டத்திலும் அவர் அப்படிப் பேச, அந்த மேடையிலேயே அவருக்கு பதிலடி கொடுத்தார் முன்னாள் தலைவர் இளங்கோவன். "யார் நல்லாட்சி நடத்தினாலும் அது காமராஜர் ஆட்சிதான்...அந்தவகையில் ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சிதான்’’ என பதிலளித்தார்...

திமுக, காங்.
“இயந்திரங்களை நம்பி மட்டுமே ஒரு கட்சி இருக்குமென்றால் அது பாஜகதான்”- செல்வப்பெருந்தகை

இந்தநிலையில், கடந்த 11-ம் தேதி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அங்கு பேசிய செல்வப்பெருந்தகை, "நாம் பிறரைச் சாா்ந்து இருக்கப் போகிறோமா அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா? எவ்வளவு காலம் பிறரைச் சாா்ந்திருக்க முடியும்?’’ என தொண்டர்களை நோக்கி கேள்விகளை எழுப்பினார்.அதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய இளங்கோவன், "தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளை வென்றோம் என்றால் அதற்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம். காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கலாம். அது பேராசையாக இருக்கக் கூடாது ’’ என பதிலளித்திருந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்குவலிமைதான் என்ன? விரிவாகப் பார்ப்போம்.

கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து, கடந்த 20 ஆண்டுகளாக, ஒரு சில தேர்தல்களைத்தவிர, காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துதான் தேர்தலைச் சந்தித்திருக்கிறது.

2004 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் ஒன்பது இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று, 14.4 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

தொடர்ந்து 2006 தேர்தலில், 48 இடத்தில் போட்டியிட்டு, 34 இடங்களில் வெற்றிபெற்றது, அந்தக் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 8.45.

தொடர்ந்து, 2009 தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்டு எட்டு இடங்களில் வெற்றிபெற்றது. அந்தக் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 15.03. தொடர்ந்து, 2011 தேர்தலில் 63-ல் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி, 9.3 சதவிகிதம் வாக்குகளையும் பெற்றது.

திமுக, காங்.
”தேதி குறித்தது யார், பிரதமரா? தேர்தல் ஆணையமா?” - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி

முதல்முறையாக, 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் உண்டானது. 17 மாநகராட்சி உறுப்பினர்கள், 166 நகராட்சி உறுப்பினர்கள் உட்பட 743 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 5.71 சதவிகித்ததைப் பெற்றது.

தி.முக கூட்டணியில் இருக்கும்போது பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட குறைவான அளவே பெற்றது. உள்ளாட்சித் தேர்தல்களில் பெறும் வாக்கு சதவிகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்றாலும்கூட ஒரு நகரசபையைக் கூட அந்தக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.கவுன்சிலர்களால் அல்லாமல், மக்கள் நேரடியாக வாக்களித்து மேயர் மற்றும் சேர்மன் உள்ளிட்ட தலைமைப் பொறுப்புகளை தேர்ந்தெடுக்கும் முறை இருந்த தேர்தல் அது..,அதில் பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் 2 இடங்களிலும் ம.தி.மு.க ஒரு இடத்தையும் கைப்பற்றிய நிலையில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ் கட்சி. அந்தத் தேர்தல் மட்டுமல்ல, தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் தனித்துத்தான் போட்டியிட்டன. அப்போது, தேர்தலில் போட்டியிடவே காங்கிரஸ் வேட்பாளர்கள் தயங்கினார்கள். ஆனால், முப்பது தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ் கட்சி. இரண்டு தொகுதிகளைத்தவிர அனைத்துத் தொகுதிகளிலும் டெபாஸிட்டையும் இழந்தது. அந்தக் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதமும் 4.3 ஆகக் குறைந்தது.

தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி வைத்து, 2016-ல் 6.47, 2019-ல் 12.76, 2021-ல் 4.27, 2024-ல் 10.67 என வாக்கு சதவிகிதத்தைப் பெற்றதோடு, நல்ல வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது. இதிலிருந்து, திமுகவுடன் கூட்டணியில் இருந்த காலத்தில்தான், நல்ல வாக்கு சதவிகிதத்தை காங்கிரஸ் பெற்றிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது.அதேவேளை, காங்கிரஸின் கணிசமான வாக்கு சதவிகிதம் திமுகவின் வெற்றிக்கு பயன்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தனித்து இயங்குமளவுக்கான செல்வாக்கு, தற்போது வரை காங்கிரஸுக்கு இல்லை என்பதே எதார்த்தமான ஒன்றாக இருக்கிறது.

திமுக, காங்.
”திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை” - செல்வப்பெருந்தகை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com