“விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேசவிரோத செயல்” - மதுரை எம்பி சு.வெங்கடேசன்

“விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேசவிரோத செயல்” - மதுரை எம்பி சு.வெங்கடேசன்
“விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேசவிரோத செயல்” - மதுரை எம்பி சு.வெங்கடேசன்
Published on

ரயில்வேக்கு சொந்தமான மைதானங்கள் மற்றும் அரங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிடக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தின் வசம் வணிக பயன்பாட்டு நோக்கத்திற்காக ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் பொருள் தனியாருக்கு விற்பதுதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை ஐ.சி.எஃப் விளையாட்டு வளாகமும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேசவிரோத செயல் எனக் குறிப்பிட்டுள்ள வெங்கடேசன், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை வென்றுள்ள 21 பதக்கங்களில் 13 ரயில்வே ஊழியர்கள் பெற்றுத் தந்தவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இது வெறும் பணம் பண்ணுகிற செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், தேசத்தின் பெருமையைப் பறை சாற்றுகிற ஆற்றல்மிக்க அடித்தள வீரர்களுக்கு வழியை அடைக்கும் அபாய முடிவாகும் என்பதால் இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com