மிரட்டும் கோடை.. சிரமம் பார்க்காமல் பூங்காவை பராமரிக்கும் ஊழியர்கள்

மிரட்டும் கோடை.. சிரமம் பார்க்காமல் பூங்காவை பராமரிக்கும் ஊழியர்கள்
மிரட்டும் கோடை.. சிரமம் பார்க்காமல் பூங்காவை பராமரிக்கும் ஊழியர்கள்
Published on

சித்தேரி மலை கிராமத்தில் அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் தண்ணீர் இல்லாததால், தூய்மை காவலர்கள் அருகில் உள்ள குட்டையில் தண்ணீர் எடுத்து வந்து பராமரிக்கும் நிலை இருக்கிறது. தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி ஊராட்சியில் 63 மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள சிறுவர்களின் பொழுது போக்கிற்காக சித்தேரி மையமாக வைத்து  அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம்  தாய் திட்டம் மூலம், கடந்த, 2016 - 2017 இல், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அம்மா சிறுவர் பூங்காவும், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. தற்பொழுது பணிகள் முழுவதும் நிறைவுப் பெற்றுள்ளது. 

மலைப் பகுதியில் இயற்கையான காற்றோட்டமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாட தேவையான அனைத்து உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான பணிகள் நிறைவடைந்தும் பூங்காவிற்கு தேவையான தண்ணீர் வசதியில்லை. பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படாமலே பணிகளை முடித்துள்ளனர். இதனால், பூங்காவை பராமரிக்க தினமும் தூய்மை காவலர்கள் அருகில் உள்ள குட்டையிலிருந்து தண்ணீரை மிகுந்த சிரம்மப்பட்டு எடுத்து வந்து பராமரித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் இல்லாததால் கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.  

உடனடியாக பூங்காவிற்கு குடிநீர் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சித்தேரி மலை கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் மகாலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, சித்தேரி மலையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்திற்கு ஆழ்துளைக் கிணறுடன் சேர்த்து தான் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மலை பகுதி என்பதால், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்த ரூ.3.5 இலட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. எனவே விரைவில் பூங்காவிற்கு தண்ணீர் வசதி செய்து தரப்படும் என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com