'இறந்தும் வாழ்கிறான்': மூளை சிதைவடைந்த மகனின் உறுப்புகளை 7 பேருக்கு தானம் கொடுத்த பெற்றோர்

'இறந்தும் வாழ்கிறான்': மூளை சிதைவடைந்த மகனின் உறுப்புகளை 7 பேருக்கு தானம் கொடுத்த பெற்றோர்
'இறந்தும் வாழ்கிறான்': மூளை சிதைவடைந்த மகனின் உறுப்புகளை 7 பேருக்கு தானம் கொடுத்த பெற்றோர்
Published on

விபத்தில் சிக்சி மூளை சிதைவடைந்த நிலையில் இருந்த மகனின் உறுப்புகளை பெற்றோர் 7 பேருக்கு தானமாக கொடுத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் என்பவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து சில மாதங்கள் ஆன நிலையில், மகன் கார்த்தி திருவள்ளூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கார்த்தி, எதிர்பாராமல் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மூளை சிதைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதனையடுத்து தங்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு மகனையும் இழந்து விட்டோமே என கண்ணீர் மல்க அழுது புலம்பிய பெறோர், கார்ததி உடலை தானம் செய்ய முன்வந்தனர். இதனையடுத்து அவரது இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 9 உறுப்புகள் மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது.

இதையடுத்து கார்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடித்து பெறோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சோழமாதேவி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட கார்த்தி உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு எரியூட்டப்பட்டது.

விபத்தில் மகனை இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாகக் கூறி கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க வைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com