”1523 - 2023” - 500 ஆண்டுகளை நிறைவு செய்யும் பரங்கிமலை தேவாலயம்; சுவாரஸ்யமான பின்னணி வரலாறு

சென்னை கிண்டி அருகே பழமை வாய்ந்த பரங்கிமலையில் அமைந்துள்ள புனித தோமையர் தேவாலயம் கட்டப்பட்டு 500 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
பரங்கிமலை
பரங்கிமலைpt web
Published on

சென்னை கிண்டி அருகே பழமை வாய்ந்த பரங்கிமலையில் அமைந்துள்ள புனித தோமையர் தேவாலயம் கட்டப்பட்டு 500 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1523 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களால் இந்த ஆலையம் கட்டப்பட்டது.

இயேசுவின் சீடர்களில் ஒருவராக அறியப்பட்ட தோமையர் உயிர்நீத்த இடத்தில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தின் வரலாறு மற்றும் சிறப்புகள் இச்செய்தியில் தொகுக்கப்பட்டுள்ளன.

பரங்கிமலை இந்தியாவின் மிகப்பழமையான சரித்திரச்சின்னம். இந்திய நிலவியல் வரைபடத்தை தயாரித்த ஆங்கிலேயர்கள் இந்த மலையிலிருந்துதான் அளவுப்பணிகளை தொடங்கினர் என்கிறது வரலாறு. கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரமுள்ள இந்த மலையில்தான் புனித தோமையார் ஜெபம் செய்தார். அவர் தனது கரங்களால் செதுக்கிய கற்சிலுவை இன்றும் வழிபாட்டில் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகப்பழமையானது இந்த தேவாலயம்.

இங்கு இரண்டாம் போப் ஜான் பால் 1986- ல் வருகை தந்து சிறப்பித்திருக்கிறார். 2011-ல் இதை தேசிய திருத்தலமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் தேவாலயத்தில் செயிண்ட் தாமஸின் கைவிரல் எலும்புத் துண்டு திருப்பண்டமாக வைத்து பூஜிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம் 18- ஆம் தேதியும் சிறப்பு வழிபாடு உண்டு. மிகவும் பழமை வாய்ந்த ஓவியங்களும் இந்த தேவாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

ஏறக்குறைய 500 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது இந்த தேவாலயம். இந்திய கிறிஸ்தவத்தின் அடையாளம் மற்றும் தொட்டிலாக திகழ்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் பல கடினமான இடங்களைக் கடந்து வேண்டுதலாக மலைக்கு நடந்து வருவார்கள். பின்னர் ராணுவ உதவியுடன் பாதை அமைக்கப்பட்டு வாகனங்கள் வந்து செல்லும் வசதி உள்ளது. கிறிஸ்துமசையொட்டி செயின்ட் தாமஸ் தேவாலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com