மொழிவாரியாக 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன. இப்போதைய தமிழ்நாடு, 'மெட்ராஸ்' என்ற பெயரில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து தனி மாநிலமாக இருந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 1956ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம் தான் தற்போது தமிழ்நாடு. எனவேதான், தற்போதைய மெட்ராஸ், தற்போதைய தமிழ்நாடு, நவம்பர் 1ஆம் தேதி தோன்றியதன் அடிப்படையில் நவம்பர் ஒன்றாம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டு அந்த நாளை 'தமிழ்நாடு நாள்' என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிவித்தது.