தேசிய கொடியை ஏற்றவிடாமல் ஊராட்சி மன்றத் தலைவரை தடுத்த ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

தேசிய கொடியை ஏற்றவிடாமல் ஊராட்சி மன்றத் தலைவரை தடுத்த ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
தேசிய கொடியை ஏற்றவிடாமல் ஊராட்சி மன்றத் தலைவரை தடுத்த  ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவரை தேசிய கொடியை ஏற்றவிடாமல் தடுத்த ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்முடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவராக இருப்பவர் அமிர்தம். இவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் ஆவார். அவர் கடந்த 15 தேதி தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது சிலர் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான செய்தி சேகரிக்க சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் கடுமையாக தாக்கப்பட்டார். இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “ஊராட்சி செயலாளர் சசிகுமார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவரை அழைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். இனி இதுபோன்று சம்பவம் எந்த ஊராட்சியிலும் நடைபெறாத வண்ணம் கண்காணிக்கப்படும். பாதிப்புக்குள்ளான பதிரிகையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறும் விவகாரம் குறித்து விசாரிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com