சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பள்ளிக்கரணை பகுதிகளிலுள்ள 300 வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த நாராயணபுரம் ஏரியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து உபரி நீர் அருகே உள்ள கால்வாய் மூலமாக செல்கிறது. ஆனால் கால்வாய் மூறையாக தூர்வாரப்படாமல் இருந்ததால் மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது
இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதிபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இதுவரைக்கும் கால்வாயை தூர்வார முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றசாட்டுகின்றனர். பரங்கிமலை துணை ஆணையர் அன்பு அந்தப் பகுதியை நேரில் பார்வையிட்டார். ஐந்துக்கு மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் வைத்து பள்ளிக்கரணை போலீஸ் உதவியுடன் கால்வாயை தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.