அமைச்சர், சட்டமன்ற உறுப்பினருடன், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் பணிகளையும் ஒருசேர கவனிப்பது கடினமாக இருந்ததால் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகியதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2017ஆம் ஆண்டு ஆரம்ப திட்டம் கூட இல்லாமல் இருந்து, தனித்துவம் மிக்க வலுவான அணியை கட்டமைத்து வழிநடத்திய ஒருவராய் தகவல் தொழிநுட்ப அணியின் ஓர் அங்கமாக இருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மறைந்த பிறகே அவரது உண்மையான மதிப்பு உணரப்படும் என்பதைப் போல், அணியை மேம்படுத்துவதற்கான தமது முயற்சிகளின் பலன்களை, டிஆர்பி ராஜா தலைமையின் கீழ் புதிய அணி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை வைத்து மதிப்பிட்டுவிடலாம் என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பணம், பதவி, பொறுப்பு போன்றவை எப்போது வேண்டுமானாலும் வந்துபோகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், திமுக மீதான பற்று, அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் அப்பாற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: ”என் வீட்டில் பணமோ, பொருளோ கைப்பற்றப்படவில்லை”- முன்னாள் அமைச்சர் அன்பழகன்