உதயமானது திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்

உதயமானது திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்
உதயமானது திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்
Published on

தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரும் 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையும் இன்று உதயமாயின. 

இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற விழாவில் திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் தலைசி‌றந்த மாவட்டமாக திருப்பத்தூர் உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், உள்ளாட்சித் தேர்தலுக்கும், மாவட்டங்கள் பிரிப்புக்கும் தொடர்பில்லை என்று கூறினார். 

வார்டு மறுவரையறைப்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனக்கூறிய அவர், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான தகவல்களை ‌பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டினார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு போதிய கடனுதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.

பின்னர் வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை 36 வது மாவட்டமாக உதயமானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாகத்தில் இதைத் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com