பழனி மலை முருகன் கோவிலில் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். ஆனால் மலை மீது கோவில் அமைந்துள்ளதால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் படிகள் வழியே ஏறி செல்வது சிரமமான செயலாகும். இதற்காக அரசு சார்பில் அங்கு ரோப்கார் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோப்கார் சேவை கடந்த ஒரு மாதமாக பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால், இன்று காலை சிறப்பு பூஜைக்கு பிறகு, ரோப்கார் சேவை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.