பழனி: காட்டு யானையால் தாக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை; காவல்துறை விசாரணை

பழனி: காட்டு யானையால் தாக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை; காவல்துறை விசாரணை
பழனி: காட்டு யானையால் தாக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை; காவல்துறை விசாரணை
Published on

பழனி அருகே பத்து வயது சிறுவனை காட்டு யானை தாக்கியதால், ஆபத்தான நிலையில் சிறுவன் பழனி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது, பெரிய ஓடை என்ற பகுதி. பழனி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒலியனூத்து காப்புக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பெரிய ஓடை பகுதிக்கு அருகே நிறைய விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயம் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி, இன்று தனது 10 வயது மகனுடன் (ஹரிதர்ஷன்) விவசாய நிலத்தில் இருந்தபொழுது, அவ்வழியே சென்ற காட்டு யானையொன்று சிறுவனை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன் ஹரிதர்ஷனை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவனுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறி, உடனடியாக சிறுவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கவேண்டும் என்று அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிறுவனை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com