மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் 49 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிய நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், நாட்டு மாட்டினங்களைப் பாதுகாப்போம், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என்று ஒரே குரலில் கூறி உறுதி மொழி ஏற்றனர். 304 காளைகள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் 49 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.