பெரம்பலூரை சேர்ந்த 300 மாணவர்களுக்கு இலவச கல்வி - பாரிவேந்தர் எம்.பி

பெரம்பலூரை சேர்ந்த 300 மாணவர்களுக்கு இலவச கல்வி - பாரிவேந்தர் எம்.பி
பெரம்பலூரை சேர்ந்த 300 மாணவர்களுக்கு இலவச கல்வி - பாரிவேந்தர் எம்.பி
Published on

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு இந்தாண்டும் எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தில் இலவசமாக உயர்கல்வி வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, பெரம்பலூர், துறையூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த 300 பேருக்கு ஆண்டுதோறும் இலவச உயர்க்கல்வி வழங்கப்படும் என நாடாளுமன்ற தேர்தலின் போது பாரிவேந்தர் அறிவித்திருந்தார். அதன்படி, 3ஆவது ஆண்டாக இலவச உயர்க்கல்வி திட்டம் தொடர்கிறது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் , வேளாண்மை, மேலாண்மை, பாரா மெடிக்கல் ஆகிய படிப்புகள் கல்விக்கட்டணமின்றி வழங்கப்படும். http/admissions.srmist.edu.in/srmistonline/perambalur என்ற இணையதளத்தில் பெரம்பலூர் மக்களவை தொகுதியை சேர்ந்த மாணவர்கள் வரும் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com