“திமுகவில் இருப்பதால் நீங்க மேயர் அல்ல” To “திருமா அண்ணாவை விட்டுவிட மாட்டோம்” - ரஞ்சித் பேசியதென்ன?

ஆம்ஸ்ட்ராங்கிற்கான நினைவேந்தல் பேரணியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “திருமா அண்ணாவை ஒருபோதும் விட்டுவிட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
மேயர் பிரியா, இயக்குநர் பா.ரஞ்சித், விசிக தலைவர் திருமாவளவன்
மேயர் பிரியா, இயக்குநர் பா.ரஞ்சித், விசிக தலைவர் திருமாவளவன்pt web
Published on

ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவேந்தல் பேரணி

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவேந்தல் பேரணி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.

2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் பேரணி எழும்பூர் நரியங்காடு பகுதியில் தொடங்கி தெற்கு கூவம் சாலை வழியாக, ஒன்றரை கிலோ மீட்டரை கடந்து ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது.

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் அட்டக்கத்தி தினேஷ், பாடகர் அறிவு, கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். சிவகாமி, ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலின பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேயர் பிரியா, இயக்குநர் பா.ரஞ்சித், விசிக தலைவர் திருமாவளவன்
கேரளா : நிபா வைரஸ் உறுதியான 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

இதுகாசு கொடுத்து கூடிய கூட்டமா?

இந்தப் பேரணியில்,

  • ‘ஆம்ஸ்ட்ராங் படுகொலை விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நடைபெற வேண்டும்

  • ஆருத்ரா நிறுவன மோசடியின் பின்னணி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இருப்பதை வெளிக்கொணர வேண்டும்

  • காவல்துறை என்கவுண்டரை அரசு ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும்

  • ஆம்ஸ்ட்ராங்க் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

  • தலித்துகளுக்கு எதிரான தொடர் வன்முறைகளை விசாரிக்க அரசு சாரா தலித் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்திட வேண்டும்’

என்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

பேரணி முடிவில் நடந்த கூட்டத்தில் பேசிய பா.ரஞ்சித், “இது காசு கொடுத்துக் கூடிய கூட்டமா? யாராவது உங்களுக்கு காசு கொடுத்தார்களா? இது அண்ணனுக்காக கூடிய கூட்டம்.

சாதி கடந்து நிறைய பேர் நம் நீலம் பண்பாட்டு மைய நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தக் கூட்டம் நடத்தினால் கலவரம் வரும், கலவரம் வரும், கலவரம் வரும் என்று பல முற்போக்காளர்கள் அக்கறையாக எழுதினார்கள். திமுக அரசுக்கு எதிராக இந்த பேரணி நடந்துவிடக் கூடாது என்று பலர் கலவரம் வரும் என்று பேசினார்கள்.

மேயர் பிரியா, இயக்குநர் பா.ரஞ்சித், விசிக தலைவர் திருமாவளவன்
சென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறு - இளைஞர் குத்தியதில் கொத்தனார் உயிரிழப்பு

நாங்கள் திரளும் நாளில் நீங்கள் எங்களிடம் வரும் நாள் வரும்

தலித் ஒருவன் எங்களுக்கான விடுதலை குறித்து பேசினால், தேவைகளை கேட்டால், பின்னால் ஒருவன் இருக்கிறான், B டீம் என்று பேசுகிறார்கள். தலித் முன்னால் வந்தால் அவன் கோட்டாவில் வந்தவன், அல்லது B டீம் என்கிறார்கள். அம்பேத்கரிய கருத்தின் அடிப்படையில் ஒருநாள் என் மக்கள் திரளும் நாள் வரும். அன்று நீ என்னிடம் வந்து நிற்பாய்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் pt web

சமூகத்தில் நோய் இருக்கிறது என்று சொன்னால் இவன் நோயை பரப்புகிறான் என்கிறார்கள். முதலில் பாஜகவினர் அண்ணனை ரவுடி என்று எழுதினார்கள். அடுத்தது களத்திற்கு வந்த திமுக ஐடி விங் அண்ணனை ரவுடி என்று தொடர்ந்து எழுதினார்கள்.

அண்ணனின் படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை காவல்துறை கண்டறியவில்லை என்றால் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அண்ணலின் வழியில் காவல்துறைக்கான நிர்பந்தந்தை உருவாக்குவோம். ஆம்ஸ்ட்ராங் அண்ணன் மிகவும் பவர்-ஃபுல்லானவர். சென்னையில் அவர் இல்லாமல் ஒன்றும் நடக்காது. 40% மேல் தலித்துகள் வாழும் பகுதி சென்னை. நாங்கள் அரசியலாக திரளும் நாளில் நீங்கள் எங்களிடம் வருவீர்கள். அந்த நாள் வரும்.

மேயர் பிரியா, இயக்குநர் பா.ரஞ்சித், விசிக தலைவர் திருமாவளவன்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: “உண்மை குற்றவாளி யாரென்று தெரிந்தால் இபிஎஸ் கூறட்டும்” - அமைச்சர் ரகுபதி

திருமாவை ஒருநாளும் விட்டுவிடமாட்டோம்

மற்ற தலைவர்களை போல் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் இல்லை. ஏராளமானோரை உருவாக்கியுள்ளார். அண்ணனின் கொலையில் எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. பவுத்தத்திற்கு அவர் முழுதாக மாறிய பிறகு அவர் கூட்டமாக சேர்ந்து செல்வதைக் கூட தவிர்த்தார். பவுத்ததிற்கு ஏராளமானோரை மாற்றினார். இந்த அடிப்படையிலும் காவல்துறை இப்படுகொலையை விசாரிக்க வேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

மேயர் பிரியா, அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
மேயர் பிரியா, அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

மேயர் ப்ரியா... திமுகவில் இருப்பதால் நீங்கள் மேயர் இல்லம்மா. அதேபோல கயல்விழி செல்வராஜ்... நீங்கள் திமுகவில் இருப்பதால் அமைச்சர் இல்லை. அம்பேத்கரின் ரிசர்வேசன்தான் உங்களுக்கு பதவி கொடுத்தது. ஆனால் நீங்கள் யாராவது ஆம்ஸ்ட்ராங்க் இறப்பிற்கு வந்தீர்களா?

அண்ணன் திருமாவளவனை நாங்கள் ஒருநாளும் விட்டுவிட மாட்டோம். திருமா எங்கள் அண்ணன். அவரை எங்களுக்கு எதிராக நிறுத்துகிறார்கள். ஆனால் திருமா அண்ணா... நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு எதிராக நிற்கமாட்டோம். நம் ஒற்றுமைக்கு விலை பேசுகிறார்கள்.

மேயர் பிரியா, இயக்குநர் பா.ரஞ்சித், விசிக தலைவர் திருமாவளவன்
கும்பகோணம்: தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக ராணுவ வீரர் உட்பட இருவர் கைது

பாஜகவிற்கு நேரெதிரானவர்கள் நாங்கள்

எப்போதும் பி.ஜே.பி, பி.ஜே.பி என்கிறார்கள். பி.ஜே.பி க்கு நேர் எதிரானவர்கள் நாங்கள். பி.ஜே.பி க்கு எதிராக அனைவரையும் திரட்டியவர் அம்பேத்கர். ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் படுகொலைக்கு பின் நடந்த பல கசப்பான சம்பவங்களைகூட ஒரு நிபந்தனையை அரசு செய்தால் மறக்க தயாராக இருக்கிறோம். ஆனால், ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அதை செய்யுமா இந்த அரசு?

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

தனித்தொகுதியில் நின்று வெற்றி பெற்று மேயராக, அமைச்சராக, எம்.எல்.ஏ, எம்.பி யாக ஆனவர்கள், இனி தலித் மக்களுக்கான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியவில்லை என்றால் தயவுசெய்து நீங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிடுங்கள். இல்லையெனில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com