தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கும் முறை 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருவதாக டிஎஸ்பிஎஸ்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
பொது பிரிவினருக்கான 31 சதவீத இடஒதுக்கீட்டில்தான் வெளிமாநிலத்தில் இருந்து தேர்வு எழுதுபவர்கள் சேர்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றால் இரண்டு ஆண்டுக்குள் மொழித்திறன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பணி ஆணை வழங்கப்படும் எனவும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெளிமாநில தேர்வுகளில் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.