”பொய்யான தகவலை பரப்புகிறார்” - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி கொடுத்த புகார்; இபிஎஸ்-க்கு சிக்கல்?

தேர்தல் ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி பொய்யான தகவலை பரப்புவதாக எடப்பாடி பழனிச்சாமி மீது ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகழேந்தி
புகழேந்திகோப்பு படம்
Published on

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக செய்தி வெளியானது. அது பற்றிய தகவல்களை கேட்டு ஜெயசிம்மன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர். அதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், 2018ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அப்படியே தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகழேந்தி கூறியுள்ளார். இந்த பதில் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான அவர் புகார் அளித்தார்.

தேர்தல் ஆணையத்தின் பெயரை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி பொய்யான தகவலை பரப்புவதாக அதில் புகழேந்தி கூறியுள்ளார். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி அனுப்பிய நிர்வாகிகள் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி தொடரும் நிலையில் அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுவதாக புகழேந்தி புகார் அளித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com