உடல்நல குறைவால் காலமான தாயின் காலைப்பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்

உடல்நல குறைவால் காலமான தாயின் காலைப்பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்
உடல்நல குறைவால் காலமான தாயின் காலைப்பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்
Published on
உடல் நலக்குறைவாரல் 95 வயதில் காலமான தாயின் முகத்தைப் பார்த்து பின் தாயின் காலைப்பிடித்து கதறி அழுதார் ஓ பன்னீர்செல்வம்.
முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ. பழனியம்மாள் நாச்சியார்(95) கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக தேனியில் நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வீட்டு திரும்பினார். 
இந்நிலையில் மீண்டும் கடந்த 22.02.2023 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் தேனி நட்டாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வந்து பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர்  சென்னை கிளம்பி சென்றார்.
இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாகக் கூறி மருத்துவமனை நிர்வாகம் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி அவரை பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பெரியகுளத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் நேற்று இரவு 10.02 மணி அளவில் மரணம் அடைந்தார்.
தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த தகவல் அறிந்ததை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பெரியகுளம் இல்லத்திற்குச் சென்று தாயாரின் உடலை பார்த்த பின் காலமான தன் தாயின் காலைப்பிடித்து கதறி அழுதார். இதனைத் தொடர்ந்து தாயின் உடலுக்கு சாங்கிய சம்பிரதாயங்களை செய்த பின்பு மாலை அணிவித்த பின்பு, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் காலமான ஓபிஎஸ் தாயாரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இறந்த ஓ. பழனியம்மாள் நாச்சியார் பெரியகுளம் ஓடக்கார தேவரின் மனைவி ஆவார். இவர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் உட்பட 5 மகன்கள், 4 மகள்கள். அவர்களில் பாலமுருகன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் இறந்த நிலையில் மீதம் 7 பேர் உள்ளனர். ஓபிஎஸ்ஸின் தாயாரின் இறுதிச்சடங்கானது இன்று மாலை 4.30 மணி அளவில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான புதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com