நடந்து முடிந்த 18ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியிடம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியடைந்தார். அதேபோல, நெல்லையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸிடம் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக முறையீடு செய்ய வேண்டும் எனில் தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது நடைமுறை.
அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜயபிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நேற்று தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.