மூத்த நிர்வாகிகளை மதிக்காத ஓபிஎஸ் அரசியல் அனாதையாகி விட்டார் - ஆர்பி. உதயகுமார்

மூத்த நிர்வாகிகளை மதிக்காத ஓபிஎஸ் அரசியல் அனாதையாகி விட்டார் - ஆர்பி. உதயகுமார்
மூத்த நிர்வாகிகளை மதிக்காத ஓபிஎஸ் அரசியல் அனாதையாகி விட்டார் - ஆர்பி. உதயகுமார்
Published on

மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உதாசீனப்படுத்தியதால் ஒபிஎஸ் இன்று அரசியல் அனாதையாகி விட்டார் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் பேசினார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் உள்ள ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசும்போது...

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு திமுக அரசு உடந்தையாக இருந்தது. மூத்த நிர்வாகிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையை ஒபிஎஸ் உதாசினப்படுத்தினார், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கருத்துக்கள் சொன்னார்கள். ஆனால், தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு தனது சர்வாதிகார போக்குக்கு காரணமாக இன்று ஒபிஸ் அரசியல் அனாதையாகி விட்டார்

குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவிலும் அதிமுகவின் ஒற்றை முகமாக அதிமுகவின் பொதுச் செயலாளரா கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் எடுத்துக்காட்டு கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

உண்மையான அதிமுகவாக திமுகவை எதிர்த்து துரோகத்திற்கும் எதிரிகளுக்கும் பாடம் புகட்டும் வகையில் 25ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. துரோகத்தை வேரறுக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டம் இருக்கும்

வரும் தேர்தல்களில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், அதியமான் மண்டலம், கொங்கு மண்டலம், மத்திய மண்டலம் என எந்த மண்டலமாக இருந்தாலும் அதிமுகவின் வெற்றி கோட்டையாக இருக்கும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com