இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றதற்காக அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது. நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.