அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியும் கட்சியும் எடப்பாடி பழனிசாமி வசம் இருக்கும் நிலையில், சட்டப்போராட்டங்களை நடத்திவந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் எந்த பொறுப்பும் இல்லை என்கிற நிலை அதிகாரபூர்வமாகி இருக்கிறது. இச்சூழலில் இருதரப்பிலும் வார்த்தை மோதல்கள் நீடிக்கின்றன. அண்மைக்காலங்களில் இருவரும் பதிலுக்கு பதில் பேசியவற்றை பார்ப்போம்.
“ஜெயலலிதாவுக்கு ஓ.பி.எஸ் விசுவாசமாக இல்லை. ஓபிஎஸ் ஸ்டாலினை ரகசியமாக சந்தித்தார்” என்பது இபிஎஸ்சின் குற்றச்சாட்டு
“நம்பிக்கை துரோகம் செய்தது யார்? ஈபிஎஸ் அரசியலை விட்டு விலக தயாரா? அதிமுகவை காப்பாற்ற 2 வது தர்ம யுத்தம்” என்றார் ஓபிஎஸ்.
............
“ஒருநாள் ஜெயலலிதா என்னை அழைத்து, எனக்கு தனிப்பட்ட முறையில் நிதி சுமை அதிகமாகிவிட்டது. ஏராளமான வழக்குகளை என் மீது போட்டிருக்கிறார்கள். வழக்கறிஞர்களுக்கு எல்லாம் பணம் தர வேண்டும் என்று கட்சி நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்டார். உண்மையில் கண்ணீர் விட வேண்டிய நிகழ்வு அது. உடனே நான் 2 கோடி ரூபாயை வழங்கினேன். அந்த 2 கோடி ரூபாயை ஒரே மாதத்தில் திருப்பி அளித்தார் ஜெயலலிதா. இதுதான் வரலாறு” என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதற்கு “ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடன் கொடுத்தாக ஓ.பன்னீர்செல்வம் கூறியது வெட்க கேடானது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
..........................
“சில ரகசியங்களை வெளியிட்டால், எடப்பாடி பழனிசாமி சிறை செல்ல நேரிடும்” என்று ஓபிஎஸ் தெரிவிக்க, “திஹார் சிறைக்கு செல்ல ஓ. பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார். அவர் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில், அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்றார் இபிஎஸ்.
..........................
“பாஜகவோடு கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது” என்றார் ஓபிஎஸ்.
“அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம்” என்றார் இபிஎஸ்.
.............................
இப்படியே இருதரப்பிலும் வார்த்தை மோதல்கள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.