11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு 

11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு 
11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு 
Published on

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி‌, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாக திமுக மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. 

திமுக மற்றும் தங்க தமிழ்ச்செல்வனின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி பணி ஓய்வு பெற்றதால், நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை புதிய அமர்வு இன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. 

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com