அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்... பரபரப்பில் சட்டமன்றம்.. முதலமைச்சர் சொன்னதென்ன?

“சட்டப்பேரவை விதிகள் தெரிந்தும் திட்டமிட்டு நாடகத்தை அதிமுக அரங்கேற்றியுள்ளது. சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு அளித்தும் அமளியில் ஈடுபட்டதை தவிர்த்திருக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web
Published on

தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம். இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயர்ந்து விடக்கூடாது என்ற அச்சமே நிலவுகிறது. கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#BREAKING | விஷ சாராயம் விவகாரம் - பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி
#BREAKING | விஷ சாராயம் விவகாரம் - பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விஷச்சாராயம்: சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள்? தகவல் கிடைத்தும் கண்டுகொள்ளா காவல்துறை? என்ன நடந்தது?

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக அரசுக்கு கடுமையான கேள்விகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்தே பேரவையில் பங்கேற்றனர்.

விஷச்சாராய மரணம் தொடர்பாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அமளியிலும் ஈடுபட்டன. கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, விஷச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என தெரிவித்தன. அவைத் தலைவர் இருக்கை முன் உட்கார்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

#BREAKING | திறமையற்ற அரசாங்கம்: இபிஎஸ்
#BREAKING | திறமையற்ற அரசாங்கம்: இபிஎஸ்

அவையின் முன்னவரான துரைமுருகன் கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என தெரிவித்தார். ஆனால் அதிமுகவினரைப் பொருத்தவரை அதை உடனடியாக விவாதிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனால் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் நடந்து கொண்ட முறை தவிர்த்திருக்க வேண்டியது

#BREAKING | திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியது அதிமுக: முதல்வர்
#BREAKING | திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியது அதிமுக: முதல்வர்

இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெற வேண்டும் என்பதில் தலைவர் கலைஞரும் நானும் அசையாத உறுதி கொண்டவர்கள். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்ற கொள்கை உறுதி கொண்டவன்.

பேரவை முன்னவரும் பேசுவதற்கு வாய்ப்பு தராமல், வாய்ப்பு தரலாம் என பரிந்துரை செய்தும் முதலமைச்சர்களாக அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கு நடந்துகொண்ட முறை தவிர்த்திருக்க வேண்டியதுதான்..” என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
”கள்ளச்சாராய மரணத்திற்கு முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்”-நீதிமன்றத்தில் முழக்கமிட்ட சவுக்கு சங்கர்!

இதன்பின் அதிமுக எம்.எல்.ஏ.-க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் அதை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே பாமக மற்றும் பாஜக எம்.எல்.ஏ-க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com