எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம்: கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கப்படும் - அப்பாவு

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம்: கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கப்படும் - அப்பாவு
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம்: கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கப்படும் - அப்பாவு
Published on

பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் அளித்த கடிதங்கள் தொடர்பாக பேரவையில் கேள்வி எழுப்பினால் உரிய பதில் அளிக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. அதில், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங், கேரள முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருகிஷ்ணன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்பு பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பாக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதே போல அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிற கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். எதிர்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ஈபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஈபிஎஸ் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு... இரண்டு நாட்கள் பேரவை கூட்டம் நடைபெறும் முதல் நாள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆகியோர் அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கைகள் தொடர்பாக தேவைப்பட்டால் விவாதம் நடத்த வாயப்புள்ளது. அதேபோல் இந்தி திணிப்பு குறித்து தனித் தீர்மானம் பேரவையில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது என சபாநாயகர் கூறினார்.

எதிர்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக ஓபிஎஸ் ஈபிஎஸ் அளித்த கடிதங்கள் தொடர்பாக பேரவையில் கேள்வி எழுப்பினால், உரிய பதில் அளிக்கப்படும். அது குறித்து வெளியே எதுவும் சொல்லமுடியாது என்று கூறி சபாநாயகரிடம்... அலுவல் ஆய்வுக ;கூட்டத்தில் எதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார் என்ற கேள்விக்கு, உறுப்பினர் என்ற அடிப்படையில் பங்கேற்றார். பேரவை நடக்கும் போது, பிற விவகாரங்கள் வெளியே விவாதிப்பது முறையாக இருக்காது என்றும் சபாநயாகர் அப்பாவு கூறினார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஐயப்பன் ஆகியோர் பேரவையில் பங்கேற்ற நிலையில், ஈபிஎஸ் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. எதிர்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் ஒன்றாக அமரும் வகையில் போடப்பட்ட இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருக்கை மாற்றமும் பேரவையில் செய்யப்படவில்லை..

இரண்டு நாட்கள் நடைபெறும் பேரவை நிகழ்வுகளில் ஈபிஎஸ் தரப்பினர் பங்கேற்று எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அளித்த கடிதங்கள் குறித்து கேள்வி எழுப்புவார்களா? இல்லை, புறக்கணிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com