முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கும் கட்சிக்கு மட்டுமே கூட்டணியில் இடம்: ராஜன் செல்லப்பா

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கும் கட்சிக்கு மட்டுமே கூட்டணியில் இடம்: ராஜன் செல்லப்பா
முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கும் கட்சிக்கு மட்டுமே கூட்டணியில் இடம்: ராஜன் செல்லப்பா
Published on

அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளே அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.


மதுரை நரிமேட்டில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளே அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியும் என்றும் தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும், “ முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எல்.முருகனின் கருத்து அவருடைய சொந்த கருத்தாகும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் மட்டுமே கூட்டணி. திமுகவின் கிராம சபை கூட்டம் செயற்கையானது. கட்சி கூட்டத்தில் யாரும் பங்கேற்காததால் கிராம சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கூட்டி வருகிறார். திமுகவின் கிராம சபையால் ஒரு பயனும் இல்லை.


எம்.ஜி.ஆர் குறித்து சீமான் தவறாக பேச மாட்டார். உள்நோக்கத்துடன் சீமான் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்கிறார். இனிமேல் விமர்சனம் செய்ய மாட்டார் என நம்புகிறோம். கமல் சிறந்த நடிகரும் இல்லை, சிறந்த அரசியல்வாதியும் இல்லை.

2500 ரூபாய் பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பால் அதிமுகவின் வாக்கு சதவீதம் மேலும் 10 சதவீதம் உயர்ந்து 70 சதவீதம் கிடைக்கும். மு.க.அழகிரி கட்சி துவங்கினால் திமுக பெரிதும் பாதிக்கப்படும். மு.க.அழகிரியால் மற்ற கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் வராது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com