ஒரு லட்சத்துக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஒரே ஒரு வேட்பாளர் வெற்றி!

ஒரு லட்சத்துக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஒரே ஒரு வேட்பாளர் வெற்றி!
ஒரு லட்சத்துக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஒரே ஒரு வேட்பாளர் வெற்றி!
Published on

தமிழகத்தில் இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஒரே ஒரு வேட்பாளர்தான் வெற்றி பெற்றுள்ளார். பொதுவாக எத்தனை வாக்கு வித்தியாசங்களில் வெற்றி அமைந்துள்ளது என்று பார்க்கலாம்.

2021 சட்டமன்றத் தேர்தலில் 100 முதல் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 8 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 31 பேரும், 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 33 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 57 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 80 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வாக்கு வித்தியாசத்தில்தான் அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான வித்தியாசத்தில் 24 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு லட்சத்திற்கு மேலான வாக்கு வித்தியாசத்தில் ஒரே ஒரு வேட்பாளர் அதாவது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமி வெற்றி பெற்றுள்ளார். அவர் சுமார் ஒரு லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி - தோல்வி: வாக்கு வித்தியாசம்

வித்தியாசம் வெற்றி பெற்றவர்கள்!

  • 100-1,000 வாக்குகள் 8
  • 1,000-5,000 வாக்குகள் 31
  • 5,000 - 10,000 வாக்குகள் 33
  • 10,000-20,000 வாக்குகள் 57
  • 20,000 -50,000 வாக்குகள் 80
  • 50,000- 1 லட்சம் வாக்குகள் 24
  • 1 லட்சத்துக்கு மேல் 1

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com