தீபாவளி | தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு!

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் இந்தாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி
தீபாவளிமுகநூல்
Published on

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் இந்தாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசை குறைப்பதற்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளாது.

அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளி
வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக வந்த மிரட்டல்; 67 பயணிகள் இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பதற்றம்

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com