ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது ஏன்? - கனிமொழி எம்பி கேள்வி

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது ஏன்? - கனிமொழி எம்பி கேள்வி
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது ஏன்? - கனிமொழி எம்பி கேள்வி
Published on

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது பேசிய அவர்...

பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், பேராசிரியர் போன்ற தலைவரை நாம் சந்திப்பது சாதாரணமான செயல் இல்லை.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஆளுநரிடம் கோரிக்கை வைத்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னால் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். பல முறை சட்ட அமைச்சர் ஆளுநரை சந்தித்தும் தற்போது வரை கவர்னர் ஒப்புதல் அளிக்காதாற்கு என்ன காரணம்? மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக் கூடாது என ஆளுநரை நியமித்துள்ளார்கள்.

இந்தி எதிர்ப்பு இன்னும் நீர்த்து போகவில்லை. சூடு சொரணை இருப்பவர்களுக்கு இந்தி எதிர்ப்பு குறையாது என பேசியவர் பேராசிரியர். திரடவிட ஆட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பி வருகிறார்கள், தமிழகம் தற்போது வளர்ச்சி பாதையில் இருக்கிறது. மருத்துவம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதுதான் திராவிட மாடல்.

நீட் மருத்துவக் கல்லூரியில் நுழைவு தேர்வு வைத்து தமிழக மாணவர்களை படிக்கக் கூடாது என பஜாகவினர். சதித் திட்டம் செய்து வருகிறார்கள். பெட்ரோல் விலை குறைந்தாலும் மத்திய அரசு விலையை குறைத்து தருவது இல்லை, மக்களை சாதி மதம் என பிரிக்கும் வேலையே பாஜகவினர் செய்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கும் எதிராக சட்டம் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர் தான் எதிர் கட்சித் தலைவர். அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவில்லை. ஆனால், திராவிட ஆட்சி அமைந்தவுடன், இளைஞர் நலனில் அக்கறை கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர் முதல்வர் ஸ்டாலின்.

மருத்துவமனைக்கு வர முடியாதவர்களுக்கு வீடு தேடி மருத்துவம் அளிக்க வேண்டும் என ஒரே நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம். இதை உருவாக்கியவர் முதல்வர் ஸ்டாலின். ஏன்று பேசினார். இந்த கூட்டத்தில் முக்கிய திமுக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com