திருவாரூர் அருகே விளை நிலங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் குழாய் ஏற்றி வந்த இரு வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு, விளை நிலங்கள் வழியாக குழாய் அமைத்து வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
தற்போது கருப்பூரில் விளைநிலங்களில் குழாய் அமைக்கும் பணியை ஒ.என்.ஜி.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனை அறிந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் குழாய் ஏற்றி வந்த இரு வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் விளைநிலங்கள் கடுமையாக பாதிப்படைகிறது என்றும், எனவே ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் பணிகளை நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.