5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வேளச்சேரியில் வெள்ள நீரில் சிக்கிய தொழிலாளர் ஜெயசீலன் சடலமாக மீட்பு!

சென்னை வேளச்சேரியில் 50 ஆழ பள்ளத்தில் தேங்கிய வெள்ளநீரில் சிக்கிய மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 5 நாட்களாக மீட்புப்பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று மதியம் அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஜெயசீலன் மற்றும் சரவணன்
உயிரிழந்த ஜெயசீலன் மற்றும் சரவணன்புதியதலைமுறை
Published on

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. புயலுக்கு முன்பு, வேளச்சேரியில் உள்ள 5 பர்லாங் சாலையில் எரிவாயு நிலயத்தின் அருகே உள்ள கிரீன் டெக் சொலியூசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கட்டுமானத்திற்காக 50 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதீத மழயால், பள்ளம் நிரம்பிய நிலையில், அருகே இருந்த ஊழியர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைகள் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டு பள்ளத்தில் விழுந்தது.

இந்த பள்ளத்தில் 4 ஊழியர்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், முதற்கட்டமாக காயங்களுடன் 2 பேர் மீட்கப்பட்டனர். மேலும் இரண்டு பேரின் குடும்பத்தினர், அவர்களை மீட்க வேண்டும் என்று 5 நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். சுமார் 64 அடிக்கு தோண்ட திட்டமிடப்பட்ட இடத்தில் 50 அடிக்கு தோண்டப்பட்டுள்ளது. அதேபோல் 50 அடி அகலமும் கொண்ட பரப்பில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இயல்பாகவே இது தாழ்வான பகுதியாக இருக்கும் நிலையில், குடியிருப்பு கண்டெய்னரானது மழைநீரோடு உள்ளே வீழ்ந்தது.

உயிரிழந்த ஜெயசீலன் மற்றும் சரவணன்
3வது நாளாக தொடரும் மீட்புப்பணி.. வேளச்சேரியில் 40 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் நிலை என்ன?

அமைச்சர்கள், அதிகாரிகளின் மேற்பார்வையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சிக்கியிருந்தவர்களில் ஒருவரான தொழிலாளி நரேஷ் என்பவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். மேலும் ஒருவரான ஜெயசீலனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இன்று மதியம் அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியான தேடுதலுக்குப் பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தங்களது உறவை இழந்துவிட்டோமே என்று அவர்களது உற்றார் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com