நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையில் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் ஒரு மணியளவில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கூடலூர் அருகே உள்ள செருமுள்ளி, அஞ்சிக்குன்னு மற்றும் முதுமலை வனப்பகுதிக்குள் உள்ள கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக நீரோடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீரானது சாலைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
முதுமலை வனப்பகுதியில் உள்ள கள்ளஞ்சேரி பகுதியில் பெய்த கன மழையில் மரம் விழுந்து ஒரு வீடு சேதமடைந்தது. இப்பகுதியில் வாழை மரங்களும் சேதமடைந்துள்ளன.