தமிழகத்தில் சாலை பாதுகாப்பை அறிவியல்பூர்வமாக செயல்படுத்துவது எப்படி? - காவல்துறை ஆலோசனை

தமிழகத்தில் சாலை பாதுகாப்பை அறிவியல்பூர்வமாக செயல்படுத்துவது எப்படி? - காவல்துறை ஆலோசனை
தமிழகத்தில் சாலை பாதுகாப்பை அறிவியல்பூர்வமாக செயல்படுத்துவது எப்படி? - காவல்துறை ஆலோசனை
Published on

தமிழகத்தில் சாலை பாதுகாப்புக்காக அறிவியல் பூர்வமான அமலாக்கத்தினை ஏற்படுத்துவது குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்.  தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர், அனைத்து மண்டல காவல்துறைத் தலைவர்கள் மற்றும் காவல் அலுவலர்கள் பங்கேற்றனர். 

தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பில் அறிவியல் பூர்வமான அமலாக்கத்தை ஏற்படுத்தவும், சென்னை, ஐஐடியிலுள்ள சாலை பாதுகாப்பு மையம் ((Centre of Excellence for Road Safety - CoERS), சாலை பாதுகாப்பு சிறப்பு இலக்குப் பிரிவு (Special Task Force on Road Safety- STFRS) மற்றும் தமிழக காவல்துறை இணைந்து தமிழக காவல் அலுவலர்களுடன் இன்று சென்னை, இந்திய தொழில்நுட்ப நிறுவன (IIT) வளாகத்தில் Ideation Workshop on Scientific Enforcement என்ற தலைப்பில் ஒரு நாள் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் தமிழகத்தில் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தவும், விபத்தில்லா மாநிலமாக மாற்றவும், சாலை பாதுகாப்பில் பல முன்னேற்றங்களுடன் கூடிய அறிவியில் பூர்வமான அமலாக்கத்தினை கொண்டு வருவதற்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் நவீன முறைகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.


இதில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், பங்கேற்று சிறப்பு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும், தமிழ்நாடு மாநில குற்ற ஆவண காப்பகத்தின் கூடுதல் காவல் இயக்குநர் மற்றும் சாலை பாதுகாப்பு சிறப்பு இலக்குப்பிரிவு வினித் தேவ் வான்கடே, சாலை பாதுபாப்பு மையம் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியம், தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆலோசனையகத்தின் டீன் பேராசிரியர் ரவீந்திர கெட்டு ஆகியோர் சாலை பாதுகாப்பில் மேற்கொள்ள வேண்டிய அறிவியல் பூர்வமான ஆலோசனைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த கலந்தாய்வில், தமிழக காவல்துறையின் 4 மண்டல காவல்துறை தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அலுவலர்கள் மற்றும் காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

- சுப்பிரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com